"அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும்" - கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக் குழு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் வரும் 26ஆம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் - கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக் குழு உத்தரவு
x
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் வரும் 26ஆம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நவம்பர் 26 ஆம் தேதி, அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை, கல்லூரிகள் மற்றும்  பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை 11 மணி அளவில் வாசிக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில்,  இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்