பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழ் பதிப்புலகின் தவிர்க்க இயலாத ஆளுமையாக இருந்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்.
பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
x
தமிழ் பதிப்புலகின் தவிர்க்க இயலாத ஆளுமையாக இருந்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார். 75 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கால தமிழகராதியை வெளியிட்டவர் க்ரியா ராமகிருஷ்ணன். இது மட்டுமின்றி பல உலக இலக்கியங்களை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்ட பெருமையும் க்ரியா ராமகிருஷ்ணணை சாரும். இவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்