பாம்பன் ரயில் பாலத்தில் மிதவை கிரேன் மோதி விபத்து

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 210 பயணிகளுடன் ரயில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தில் மிதவை கிரேன் மோதி விபத்து
x
கொரோனாவுக்கு பிறகு தொலைதூர ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்துக்கும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. வழக்கம் போல், பாம்பன் பாலம் வழியாக மண்டபம் நோக்கி ரயில் சென்ற நிலையில், பாலத்தின் மீது மிதவை கிரேன் மோதியது. கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக ஏற்பட்ட இந்த நிலையால், 210 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட ரயில், பாலத்தின் நடுவே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின், மீண்டும் ராமேஸ்வரத்துக்கு ரயில் சென்றது. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மிதவை கிரேனை போராடி மீட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்