சமூக வலைதளங்களில் சிறுமிகளை குறிவைக்கும் கும்பல் - சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிடும் பெண்களே உஷார்!
பதிவு : நவம்பர் 07, 2020, 03:38 PM
சமூக வலைதளங்களில் பள்ளி சிறுமிகளை குறிவைத்து ஆபாச வீடியோக்கள் அனுப்பி, சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்...
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்த சிறுமி, அதில் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறவே, அவர்கள் உடனடியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மயிலாப்பூர் மகளிர் போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மகேந்திரன், அனாகாபுத்தூரை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆண், பெண் என இரண்டு பெயர்களிலும் இவர்கள் ஏராளமான போலி கணக்குகளை வைத்துள்ளனர். இந்த போலி கணக்குகள் மூலம், பள்ளி சிறுமிகளிடம் பழகும் இந்த கும்பல், சிறுமிகள் தங்களது பக்கத்தில் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை டவுண்லோடு செய்து, ஆபாசமாக சித்தரித்துள்ளனர். அவற்றை வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிர்ந்து வந்துள்ளனர். இன்னும் பல சிறுமிகளுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்களது செல்போனில் ஏராளமான சிறார் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை பதிவு செய்து வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.இந்த கும்பல் மேலும் ஏதேனும் பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? இவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

416 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

19 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

14 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

167 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3448 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4666 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.