சட்டவிரோத தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார் - ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப அறிவுரை

தமிழில் எழுதி அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வலியுறுத்தி உள்ளார்.
சட்டவிரோத தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார் - ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப அறிவுரை
x
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், சாயப் பட்டறைக்கு  சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதாக பண்ருட்டி தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி அளித்த புகாரை, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியுள்ளார். அந்த மனு தமிழில் இருப்பதாக கூறிய அமைச்சக அதிகாரிகள், அதை சிவக்கொழுந்துவுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். புகார் மனுவை, ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் எழுதி அனுப்புமாறு கூறியதால், அதிர்ச்சியடைந்த சிவக்கொழுந்து, மொழி பாகுபாடு காரணமாக, தமிழ் மொழி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தார். இது தமிழ் மொழிக்கு செய்யும் அவமரியாதை என்ற சிவக்கொழுந்து, அந்த அதிகாரிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்