பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்த கிராம மக்கள் - ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான திடல் ஏரி உள்ளது.
பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்த கிராம மக்கள் - ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு
x
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான திடல் ஏரி உள்ளது. சிந்தாமணி, கீழப்பிடாகை உள்ளிட்ட கிராமங்களின் 750 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி இருக்கிறது. இந்நிலையில், பொக்லைன் மற்றும் லாரிகள் மூலம் சிலர் இந்த ஏரியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியுள்ளனர். இதைப்பார்த்த ஊர்மக்கள் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய இரண்டு பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனர். மேலும், இதுதொடர்பாக பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் பாண்டியன், கீழையூர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்