நெருங்கும் ஆயுத பூஜை - சூடு பிடிக்காத பொரி விற்பனை

ஆயுதபூஜைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், பூஜைக்குத் தேவையான பொரி வியாபாரம் இன்னமும் சூடுபிடிக்கவில்லை என்கிறார்கள், பாரம்பர்ய பொரி தயாரிப்பாளர்கள்.
நெருங்கும் ஆயுத பூஜை - சூடு பிடிக்காத பொரி விற்பனை
x
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை. ஆண்டு முழுவதும் உழைத்து தொழில் சிறக்கவைத்த பொருட்களை, இறைவன் முன்வைத்து எதிர்காலம் சிறக்க வழிபடுவது இந்நாளின் வழக்கம். பூஜையின்போது பொரி, சுண்டல் கொடுத்து மகிழ்வது மக்களின் வாடிக்கை. அந்தவகையில், ஆயுதபூஜை நெருங்கிவந்துமே இந்த ஆண்டு பொரி விற்பனை தொடங்கவில்லை என்கிறார்கள், ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில், 40 ஆண்டுகளாக அடுப்பு வைத்து பாரம்பர்ய முறையில் பொரி தயாரிப்பவர்கள். அடுப்பில் பாரம்பர்ய முறையில் தயாரிக்கும் பொரியை விடவும், இயந்திரங்கள் மூலம் தயாராகும் பொரி உற்பத்தியிலும், விலையிலும் மலிவாக இருப்பதே, இந்த நிலைக்குக் காரணம் என்றும், பாரம்பர்ய முறையிலான பொரி தயாரிப்பு சுணக்கம் அடைந்து வருவதாகவும், அவர்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்