பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் தமிழக குழந்தைகள் : குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் தமிழக குழந்தைகள் : குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்
x
புதிய திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதல்10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் பாலியல் வன்முறையால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் ஒருவேளை கர்ப்பமடைந்திருந்தால் 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்