சமையல் எரிவாயு கசிவால் விபத்து - சினிமா புரொடக்‌ஷன் ஏஜென்ட் பலி

சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து விபத்துக்குள்ளானதில் சினிமா புரொடக்‌ஷன் ஏஜென்ட் ஒருவர் பலியானார்.
சமையல் எரிவாயு கசிவால் விபத்து - சினிமா புரொடக்‌ஷன் ஏஜென்ட் பலி
x
சென்னை சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். 62 வயதான இவர், சினிமா துறையில் புரொடக்‌ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். தன்னுடைய வீட்டில் சமைப்பதற்காக சென்ற இவர், அடுப்பை பற்ற வைத்துள்ளார். ஏற்கனவே கேஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததால் இவர் பற்ற வைத்த தீ, உடனே அறை முழுவதும் பரவியது. இதனால் பெரும் சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து சேதமானது. இதில் படுகாயமடைந்த சந்திரகேசர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 60 சதவீதத்திற்கும் மேல் காயம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 


 


Next Story

மேலும் செய்திகள்