தொடரும் பைக் திருட்டு சம்பவங்கள் - கள்ளச்சாவி போட்டு திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தொடரும் பைக் திருட்டு சம்பவங்கள் - கள்ளச்சாவி போட்டு திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு
x
சென்னையில் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நுங்கம்பாக்கம், அப்புதெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதாப் என்பவரின் விலை உயர்ந்த வாகனம் திருடு போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர்கள் 2 பேர், கள்ளச்சாவி போட்டு வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்