பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க திட்டமிட்ட கணவன், ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி அவதூறு
பதிவு : அக்டோபர் 10, 2020, 07:12 PM
பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க அவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கொடூரம் மதுரையில் அரங்கேறியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த பெண் ஒருவருடன் 2018ல் திருமணம் நடந்துள்ளது. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜமுருகன் திருமணமான சில நாட்களிலேயே மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், திருமணமான 20 நாட்களிலேயே தன் கணவரை பிரிந்தார். 

தன் பெற்றோர் வீட்டிற்கு வந்த அந்த பெண், கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே இருந்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ராஜமுருகன் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன், தன் மனைவியை பழிவாங்க திட்டமிட்டார். தன் மனைவி என்றும் பாராமல் அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்துள்ளார். 

பின்னர் அந்த படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். மேலும் அவ்வாறு மார்பிங் செய்யப்பட்ட படங்களை எல்லாம் மனைவி வீட்டாருக்கும் அனுப்பியிருக்கிறார் அவர். இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள், உடனே சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து இத்தகைய செயலில் ஈடுபட்ட ராஜமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த மாதம் சென்னையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அவரது படங்களை இதேபோல் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் திருச்சியிலும் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கணவனுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையும் பயமாய் மாறிப்போகும் என்பதில் சந்தேகமில்லை... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

39 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

19 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

26 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.