அமைச்சர் வீரமணி மீது மோசடி புகார் - தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

வேலூரில் நிலம் வாங்கியதில், 52 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் அமைச்சர் கே.சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் முன்அனுமதி பெற தேவையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் வீரமணி மீது மோசடி புகார் - தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
x
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 7 ஏக்கர் நில
விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி, சேகர் ரெட்டி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க  உத்தரவிடக் கோரிய வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை  எதிர்த்து நில உரிமையாளர்கள் 
ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நிலம் தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் தானே தவிர, அரசு ரீதியாகவோ அல்லது அமைச்சர் என்ற அடிப்படையிலோ இல்லை என்பதால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் முன்அனுமதி தேவையில்லை என கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்