Free Fire Game விளையாடிய சிறுவனிடம் பணம் மோசடி - வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்து குறைந்த பணம்

செல்போனில் Free Fire Game விளையாடிய சிறுவன் அதன் மீதான மோகத்தால் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Free Fire Game விளையாடிய சிறுவனிடம் பணம் மோசடி - வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்து குறைந்த பணம்
x
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு 12 வயதில் மகன் உள்ளார். 8வது படித்து வரும் இவர், கொரோனா விடுமுறையால் எந்நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்துள்ளார். 

ஆன்லைன் வகுப்பில் தான் மகன் கவனம் செலுத்துகிறார் என பெற்றோர் நினைத்திருக்கையில், மகனோ விதவிதமான ஆன்லைன் விளையாட்டுகளை தேடி தேடி விளையாண்டு இருக்கிறார். அப்படி அவருக்கு அறிமுகமானது தான் Free Fire Game எனும் விளையாட்டு. 


கிட்டத்தட்ட பப்ஜி போலவே இருக்கும் இந்த விளையாட்டிலும் ஏகப்பட்ட சவால்கள் உண்டு. ஒவ்வொரு லெவலுக்கும் செல்லும் போது குறிப்பிட்ட தகவல்களை கேட்கும். அப்படி கேட்ட தகவல்களை எல்லாம் சரியாக கொடுத்துள்ளான் சிறுவன். ஒரு லெவலில் சிறுவனை ஒன்று முதல் 90 ஆயிரம் வரை நம்பராக எழுத சொல்லி கட்டளை வந்திருக்கிறது. அதையும் சரியாக செய்து வந்துள்ளான் சிறுவன்... 

ஒரு கட்டத்தில் வங்கி அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்ட தகவல்களை கேட்க, தன் தாயின் ஏடிஎம் கார்டு நம்பரை அப்பாவியான சிறுவன் பதிவு செய்துள்ளார். பின்னர் செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரவே அதையும் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை சிறுவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவன் மூழ்கிக் கிடந்தது விளையாட்டு மோகத்தில்... 

ஆன்லைன் விளையாட்டு கன ஜோராக சென்று கொண்டிருந்த போது தான் வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைவது பெற்றோரின் கவனத்திற்கு சென்றது.  5 ஆயிரம், 10 ஆயிரம் என கிட்டத்தட்ட 90 ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிபோனதை அறிந்த பெற்றோர் சிறுவனிடம் கேட்கவே, நடந்த அனைத்தும் வெளிவந்திருக்கிறது. 

ஏற்கனவே ப்ளூவேல் விளையாட்டு பல சிறுவர்களுக்கு வினையானது. அடுத்து வந்த பப்ஜியும் பலரை பாடாய் படுத்தி வைத்தது. இப்போது புதிதாக இந்த விளையாட்டு ஒரு சிறுவனை அடிமையாக்கி வைத்ததோடு அவனை ஏமாளியாகவும் ஆக்கியிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்