கிசான் திட்டத்தின் மூலம் ரூ.1.20 கோடி முறைகேடு - சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலி முகவரி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
கிசான்  திட்டத்தின் மூலம் ரூ.1.20 கோடி முறைகேடு - சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
x
கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போலி முகவரி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 90 சதவீத பயனாளிகள் போலி முகவரிகளை கொடுத்துள்ளதும் சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்துள்ளது. இதுவரை 1 கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 17 பேரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

கிசான் திட்டம் மூலம் ரூ.18 கோடி முறைகேடு - ரூ.2.70 கோடி மீட்பு- போலீசார் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முறைகேடாக செலுத்தப்பட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக கணினி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்