பயிற்சி மருத்துவர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை - 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

பயிற்சி மருத்துவர் கண்ணனின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை - 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
x
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எலும்பு முறிவு பிரிவில் பயிற்சி மருத்துவராக உடுமலை பேட்டையை சேர்ந்த கண்ணன் பணியாற்றி வந்தார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர், கடந்த ஜூலை 20ஆம் தேதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி கண்ணனின் தந்தை முருகேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், விசாரணையை 12 வாரத்திற்குள் விசாரித்து முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.  விசாரணையை கிழக்கு மண்டல இணை ஆணையர் மேற்பார்வையிடவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்