ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ?- மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ?- மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
x
31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்திற்குப் பிறகு, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகவுள்ளன. மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கிடையே சென்றுவர கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தளர்த்தப்படுமா என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜான்சி வேளாண் கல்லூரி புதிய கட்டடங்கள் - பிரதமர் திறந்துவைக்கிறார்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக் கழக கல்லூரி மற்றும் நிர்வாக கட்டிடங்களை 
இன்று பகல்12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.  கல்லூரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, விவசாயத்தில் அதிநவீன ஆராய்ச்சிக்கும், உழவர் நலனுக்கும் இது பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்