திமுக தலைவராக மூன்றாம் ஆண்டில் ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து

திமுக தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக மூன்றாம் ஆண்டில் ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து
x
திமுக தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள  ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், பாசிசத்தை வீழ்த்தும் பணியில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 45 ஆண்டுகால தொடர் உழைப்பு என பெருமிதம் தெரிவித்துள்ள உதயநிதி, கைது, சிறை என தொடங்கிய பொதுவாழ்வு, சுய மரியாதைக்கு எதிரான அடிமைத் தனத்தை எதிர்த்தும்,  உரிமைகளை நசுக்கும் பாசிசத்தை வீழ்த்தவும், கருணாநிதியின் வழியில், திமுக தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி மகிழ்கிறோம் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்