இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு - விசாரணை

தஞ்சை அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, அவரது உறவினர்களால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு - விசாரணை
x
தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டையை அடுத்துள்ள எழுத்தாணிவயலை சேர்ந்த ஜெகதீஷ்வரன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் பால்யகால நண்பர்கள். 

கடந்த 21ஆம் தேதி பாலகிருஷ்ணனின் காரை எடுத்துச் சென்ற ஜெகதீஷ்வரன், மீண்டும் நண்பனின் வீட்டில் சாவியை கொடுத்துள்ளார். 

அப்போது மது போதையில் இருந்த அவர், நண்பனின் தங்கை சினேகாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பின்னர், தனது வீட்டுக்கு திரும்பிய ஜெகதீஷ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், ஜெகதீஷ்வரனின் உறவினர்களான ரமாமணி மற்றும் உமா ஆகியோர், பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரது தங்கை சினேகாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

ஜெகதீஷ்வரனின் சாவுக்கு நீ தான் காரணம் என கூறிய அவர்கள், சினேகா மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சினேகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கில், ஜெகதீஷ்வரனின் உறவினர்களான ரமாமணி மற்றும் உமா இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்