காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.
காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு
x
2019ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற காமராஜர் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி தேர்வை, திருவனந்தபுரம், மலப்புரம் உள்பட  3 மாவட்ட மையங்களில் 700-க்கும் மேற்பட்டோர் எழுதி உள்ளனர். விடைத்தாள்களை பல்கலைக்கழகம் கொண்டு வந்த நிலையில், தேர்வுத் துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள், குறிப்பிட்ட 3 மையங்களில் எழுதப்பட்ட விடைத்தாள்களை எடுத்து அதில், ரகசிய குறியீட்டு எண்களை எழுதியுள்ளனர். தகவல் அறிந்து நடத்திய சோதனையில், இடைச் செருகல் தாள்கள் இருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், மாணவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்றரைக் கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் தீனதயாளன் உள்ளிட்ட இருவர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்