திருச்சி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - சமூக இடைவெளி இன்றி மீன்கள் வாங்கி சென்றனர்
பதிவு : ஆகஸ்ட் 08, 2020, 02:45 PM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2020, 03:55 PM
நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூடினர்.
நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய காவலர்கள் பணியில் இல்லாததால் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் 
இதே நிலை நீடிப்பதால், போதிய காவலர்களை பணியமர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், 
இன்றே இறைச்சி கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். 
சென்னை பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சமூக இடைவெளி இன்றி அனைவரும் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி செல்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.