சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார்.
சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு
x
நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார். வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றையும் சிபிஐயிடம் தெரிவித்தார்.  நேற்று வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை வந்த சிபிசிஜடி போலீசார் சுமார் 7 மணிநேரம் சிபிஐயிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்தனர். 


சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு வழக்கு - முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிஐ


சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் வீட்டிலும், மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டனர். சிபிஐ-ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் ஜெயராஜ் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். ஜெயராஜின் மனைவி, மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம்  4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மற்றொரு குழுவினர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் விசாரணை - வீடியோவில் பதிவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்
சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோவாக பதிவு செய்தனர். 7 மணி நேரம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் - ஆதாரங்கள் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவற்றின் விவரங்கள் சில கசிந்துள்ளன. ஜெயராஜ், பென்னிக்ஸின் அணிந்திருந்த மூன்று கைலிகள், ஏழு உள்ளாடைகள், ஒரு பிவிசி பைப், ஒரு லத்தி, பிஸ்கட் மற்றும் பிரட் பாக்கெட் ஒன்று என சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை-  சிறை காவலர்கள், விசாரணை கைதிகளிடம் விசாரணை


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, கோவில்பட்டி கிளை சிறையில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் இருந்த போது, உடன் இருந்த விசாரணை கைதிகளிடமும், மாஜிஸ்திரேட் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்த போது இருவரின் உடல்நிலை, மனநிலை, காயங்கள் இருந்ததா, சிறையில் தொந்தரவு எதுவும் அளிக்கப்பட்டதா  என்பது தொடர்பான கேள்விகள்  கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிசிஐடி போலீசாருக்கு ஐ.ஜி சங்கர் பாராட்டு - வெகுமதி வழங்கி கவுரவித்தார், சிபிசிஐடி ஐ.ஜி

சாத்தான்குளம் வழக்கில், சிறப்பாக பணியாற்றியதாக, சிபிசிஐடி போலீசாருக்கு, ஐ.ஜி சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் அதிரடியாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், 10 பேரை கைது செய்தனர். முதற்கட்டமாக 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிய சிபிசிஐடி போலீசாருக்கு, ஐ.ஜி சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெகுமதி வழங்கி அவர்களை கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்