உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி நிலைமையைக் காரணம் காட்டி, விளம்பரங்களையோ - அவசியமில்லாமல்   டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் தள்ளி வைக்க முடியாத துணை முதல்வரின் கீழ் உள்ள நிதித்துறை, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார் . கொரோனா முன்கள வீரர்களில் முக்கியமாக இருக்கும் மருத்துவர்கள் விஷயத்தில் ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது என்றால், டெண்டர்களுக்கு ஆயிரம் கோடி,10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு எங்கிருந்து நிதி வருகிறது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்