தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு

மாநிலம் முழுவதும் ஆயிரத்து 89 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு
x
தமிழகத்திலேயே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் சேலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 184 வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக சென்னை மாநகரில் 158 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 84 பகுதிகளும், முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரையில் 75 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் தேதி நிலவரப்படி நீலகிரி, நாமக்கல், தருமபுரி, வேலூர், பெரம்பலூர், கரூர், மற்றும் அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்று இல்லாததால் கட்டுப்பாடு நீக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக அவை உருவெடுத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்