சென்னையில் 6 ஆம் தேதிக்கு பின் தளர்வுகள் - தமிழக அரசு உத்தரவு

சென்னையில் வரும் 6 தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னையில் 6 ஆம் தேதிக்கு பின் தளர்வுகள் - தமிழக அரசு உத்தரவு
x
* கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஜூலை 31 ஆம் தேதி வரையிலான ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

* சென்னையில், இன்று முழு  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை  பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* உணவகங்கள் காலை 6  மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்றும், பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

* ஆன்-லைன் உணவு சேவைகள் இரவு 9 மணிவரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* மால்கள் திறக்க அனுமதி இல்லை, இதர வணிக வளாகங்கள் ஷோரூம்கள் மற்றும் தங்க நகை, ஜவுளி கடைகள் ஆகியவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்