கைதான உதவி ஆய்வாளர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே மாற்றுத் திறனாளியை தாக்கியதாக புகார் உள்ள நிலையில் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கைதான உதவி ஆய்வாளர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவு
x
கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் மதபோதகர் அய்யாதுரை என்பவர் மத பிரசாரம் செய்து இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அய்யாதுரை உள்ளிட்ட 10 பேர் சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளியான அய்யாதுரையை உதவி ஆய்வாளர்களான பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மே 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக், மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார். அதில் மாற்றுத் திறனாளி மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த மாற்றுத் திறனாளிகள் ஆணைய தலைவரான ஜானி டாம் வர்கீஸ், மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதா? முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் 18ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். 

-------------------------------------------

Next Story

மேலும் செய்திகள்