நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கண்பத்தாஸ், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின்,ரசிகர் என்றும், அவரது மரணத்தால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடிதம் எழுதி வைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்