ஆன்லைன் வகுப்புகள் - ஜூலை 6ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குல், வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை 6ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் - ஜூலை 6ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்
x
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புக்களை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துக்களை பெற்று தெரிவிக்க, 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்.அதேபோல், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்