உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு

உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு
x
உணவகங்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும் என்றும்,கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.ஏ.சி.பயன்படுத்தக்கூடாது, ஜன்னல்கள் திறந்து வைத்து, காற்றோட்டமாக இருக்க வேண்டும் எனவும்,கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கை உறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,உணவை தயார் செய்யும் ஊழியர்கள், சமூக இடைவெளியோடு இருப்பதோடு, ஆபரணங்கள், கை கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்