திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது - 35 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார்

திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த திருடனை போலீசார் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கால் நகை கடகு கடைகள் மூடப்பட்டுள்ளதால் அந்த திருடன் போலீசில் சிக்கியுள்ளார்.
திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது - 35 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார்
x
சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம், மர்ம நபர் 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றார். இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர். 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்தான் சிசிடிவி காட்சியில் இருப்பவர் என்பதை உறுதி செய்தனர். சக்திவேலை பிடித்த போலீசார்,  விசாரணை நடத்தியபோது, கோபாலகிருஷ்ணன் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து,  வீட்டில் மனைவி மற்றும் தாய்க்கு தெரியாமல் நகைகளை மறைத்து வைத்திருந்ததை அவர் கூறியதால் போலீசார் மீட்டனர்.  நகை அடகுக்கடைகள் கொரோனா ஊரடங்கால் திறக்கப்படாததால், திருடிய நகைகளை சக்திவேலால் விற்க முடியவில்லை. வீட்டில் அந்த நகைகளை பதுக்கி வைத்திருந்தால் சக்திவேல் சிக்கியதால் போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்