"புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

புதிய மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
x
திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* மீண்டும் பாஜக ஆட்சி ​அமைய மக்கள் அளித்த வாக்குகள், மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது, ஆரோக்கியமான மத்திய- மாநில உறவுகளுக்கு உகந்ததல்ல என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

* மின்சாரத்தை தனியார் மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

* புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில அம்சங்கள், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும்,  
* அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் உள்ளதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

* மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிக்கு துணை நின்றிட வேண்டும் என பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி அரசு அல்லாத மாநில முதல்வர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்