கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு - புதிய வைரஸ் குறித்து சிபிஐ எச்சரிக்கை

கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும், புதிய வைரஸிடம் இருந்து பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு - புதிய வைரஸ் குறித்து சிபிஐ எச்சரிக்கை
x
வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரிக்கை செய்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும், வங்கிகளுக்கும் சிபிஐ அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. கொரோனா தொற்று தொடர்பான விபரங்களை பெற குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதனை பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள வைரஸ் கம்ப்யூட்டரில் அல்லது செல்போனில் புகுந்து, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களையும் ரகசிய குறியீடுகளையும் திருட முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெயரில், ஆன்-லைன் பண மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் நடப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி, உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்