"தொகுதி நிதி ரத்து - ஜனநாயகத்துக்கு எதிரானது" - உத்தரவை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்திருப்பது ஜனநாயத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி நிதி ரத்து - ஜனநாயகத்துக்கு எதிரானது - உத்தரவை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்
x
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது 2019 -20 ஆம் ஆண்டுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடு ஆகாது என தெரிவித்துள்ளார். மூன்று வருட தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல் என்பதால், இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 












Next Story

மேலும் செய்திகள்