விரைவாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை - "வாக் த்ரு டெஸ்டிங் பூத்" பரிசோதனை முறை அறிமுகம்

கொரோனா நோயாளிகளை கண்டறிய 'வாக் த்ரு டெஸ்டிங் பூத்' என்னும் பரிசோதனை முறை திருச்சி அண்ணல் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விரைவாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை - வாக் த்ரு டெஸ்டிங் பூத் பரிசோதனை முறை அறிமுகம்
x
கொரோனா நோயாளிகளை கண்டறிய 'வாக் த்ரு டெஸ்டிங் பூத்' என்னும் பரிசோதனை முறை திருச்சி அண்ணல் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனோ தொற்றுக்கான அறிகுறி தென்பட்டு, கொரோனா பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு கண்ணாடி அறையினுள் உள்ள மருத்துவர் துளைவழியாக தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரிப்பர். அதன் பின்னர் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையிலேயே நடைபெறும், இரண்டு நிமிடத்தில் இந்த மாதிரி எடுக்கும் பணி நிறைவுபெறும். இதன்மூலம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகளை எடுக்கமுடியும். 

Next Story

மேலும் செய்திகள்