"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு
x
உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றும் வாகன போக்குவரத்தில் 15 வாகனங்களே இயங்குவதாக தெரிவித்துள்ளனர். நேஷனல் பர்மிட் பெற்ற 12 லட்சம் சரக்கு வாகனங்களில், தற்போது 2 லட்சம் வாகனங்களே இயக்கப்படுகின்றன என்றும், அதனால் உணவுப்பொருள் விநியோகத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஊடரங்கு காரணமாக ஓட்டுநர்கள்,  தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த அமைப்பில் சுமார் 1 கோடி சரக்கு வாகனங்கள், 55 லட்சம்  ஆம்னி பேருந்துகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்