டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - மண்டபத்திற்கு மாற்றப்பட்ட மதுபாட்டில்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - மண்டபத்திற்கு மாற்றப்பட்ட மதுபாட்டில்கள்
x
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை உடைத்து, மதுபாட்டில்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மதுபானங்களை பாதுகாக்கும் முயற்சியில் கலால்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்த, மது பிரியர்கள் அங்கு திடீரென திரண்டனர். அவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். இதையடுத்து திருமண மண்டபத்திற்கு சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்