டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு விசாரணை : இதுவரை 66 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. பதில் மனு

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு விசாரணை : இதுவரை 66 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. பதில் மனு
x
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி. சார்பில் டிஎஸ்பி ஆர்.சந்திரசேகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் முறைகேடு தொடர்பாக இதுவரை  66 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும், இந்த வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும்,  எனவே வழக்கு விசாரணையை  சிபிஐ-க்கு விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்