டி.என்.பி.எஸ்.சி வழக்கு : நிதித்துறை அலுவலக உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில்ஜாமீன் கோரி, ஆற்காடு வணிக வரித் துறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்பாலாஜி, மற்றும், சென்னை நிதித்துறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் தீபக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி வழக்கு : நிதித்துறை அலுவலக உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு
x
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில்ஜாமீன் கோரி, ஆற்காடு வணிக வரித் துறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்பாலாஜி, மற்றும், சென்னை நிதித்துறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் தீபக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி செல்வகுமார் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என கூறினார். சாட்சிகளை கலைக்க கூடும் என காவல் துறை தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட அருண்பாலாஜி, தீபக் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்