திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் சஸ்பெண்ட் என அறிவிப்பு - துரைமுருகன் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை ரத்து

இந்த விவாதத்தின்போது திமுக உறுப்பினர் ஆஸ்டின் சத்தம் போட்டதால் சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு முதல்வர் பேசும் போது குறுக்கீடு செய்யக்கூடாது என எச்சரித்தார்.
திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் சஸ்பெண்ட் என  அறிவிப்பு - துரைமுருகன் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை ரத்து
x
இந்த விவாதத்தின்போது திமுக உறுப்பினர் ஆஸ்டின் சத்தம் போட்டதால் சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, முதல்வர் பேசும் போது குறுக்கீடு செய்யக்கூடாது என எச்சரித்தார். பின்னர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர் ஆஸ்டினை ஒரு நாள் சஸ்பெண்ட்  செய்வதாக சபாநாயகர் அறிவித்தார் . இதனால் அவையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டு ஆஸ்டின் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, ஆஸ்டின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்