கிருஷ்ணகிரி : பள்ளி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் வன்முறை திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் திமுக நிர்வாகி மற்றும் பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் வன்முறை திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார்
x
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த யானைக்கல் தொட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் ப்ளஸ் ஒன் படித்து வந்துள்ளார். 

இவருக்கும் அதே பகுதியில் அரசு ஆண்கள் பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. பதின்ம வயதில் இருந்த இருவருக்கும் காதல் வரவே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்ட அந்த மாணவன், தனது நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 

இதுதான் சரியான தருணம் என திட்டமிட்ட அந்த கும்பல், மாணவியை தனியாக ஒரு இடத்துக்கு வரவழைக்க திட்டம் போட்டு கொடுத்துள்ளது. இதை செயல்படுத்த திட்டமிட்ட அந்த மாணவன், அந்த பெண்ணை தனியாக வருமாறு கூறியுள்ளார். ஆனால் தன் காதலனின் சுயரூபம் தெரியாத அந்த பெண்ணும் ஆந்திர மாநில எல்லைக்கு தனியாக சென்றுள்ளார். 

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த திமுக நிர்வாகியான ராஜா, திம்மசமுத்திரத்தை சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோர் மாணவிக்கு தென்னங்கள்ளை ஊற்றிக் கொடுத்துள்ளனர். இதில் அந்த மாணவி மயங்கிய நிலையில் 3 பேர் கொண்ட அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ளது. 

போதை தெளிந்ததும் தான் மாணவிக்கு நடந்தது என்ன என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நடந்ததை தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவன் மற்றும் திமுக நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

பதின்ம வயதில் ஏற்பட்ட காதல் மாணவியின் எதிர்காலத்தை இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்