மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்

நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்
x
நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தனுஷின் 40வது திரைப்படமான ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து நெல்லை ராம் திரையரங்கு முன் திரண்ட தனுஷ் ரசிகர்கள்  மூன்று அடி நீளமுள்ள வாளால் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அந்த வாளை பறிமுதல் செய்த போலீசார், ரசிகர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே அங்கு தனுஷ் வர உள்ளார் என தகவல் வெளியானதால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன் குவிந்தனர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்