திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணாஅறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற  கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

* என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி,  இயக்கம் நடத்தப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 * ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று ஒரு  தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது 

Next Story

மேலும் செய்திகள்