தடுப்பு ஊசி போடப்பட்ட 5 மாத குழந்தை உயிரிழந்ததாக புகார் : ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

ஆரணி அருகே 5 மாத குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பு ஊசி போடப்பட்ட 5 மாத குழந்தை உயிரிழந்ததாக புகார் : ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்த சீரஞ்சிவி - தமிழரசி தம்பதியினரின் 5 மாத குழந்தையான லித்தேசுக்கு,  நேற்று புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் லித்தேஷ்  மூச்சு பேச்சு இன்றி காணப்பட்டதால் உடனடியாக  ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு குழந்தையை சோதனை செய்த மருத்துவகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் நெசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த ஆரணி கிராமிய போலீசார்,  வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை கேட்காமல், செவிலியர் செந்தமிழ்செல்வி தடுப்பு ஊசி போட்டது தான் குழந்தை இறப்பு காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்