தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 எழுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
x
 டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாலுகா மையங்களில் நடைபெற்ற தேர்வில், சில தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண் பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த டிபிஐ அலுவலக உதவியாளராக பணிபுரியும் சென்னையை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், மற்றும் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நிதிஷ்குமார் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், கீழக்கரை மையங்களை தவிர வேறு எங்கும் முறைகேடு நடைபெறவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி தேர்வில்  நடைபெற்ற முறைகேட்டில் தமிழ்நாடு பள்ளிகல்வி துறையில் உதவியாளராக பணிபுரியும் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும்  தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும்  மாஜிஸ்திரேட் நாகராஜன் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து  மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து மூன்று பேரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்