நாமக்கல் : தொடர் இருசக்கர வாகன திருடன் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, திருடன் கைது செய்யப்பட்டான்.
நாமக்கல் : தொடர் இருசக்கர வாகன திருடன் கைது
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, திருடன் கைது செய்யப்பட்டான். இந்த பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு போவதாக வந்த பல புகார்களை அடுத்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வாகன சோதனையின் போது, சந்தேகம் படும்படியாக வந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்