ஸ்தபதி-க்கு சிற்பகலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரத்தில் உள்ள அரசு சிற்பக்கலை கல்லூரியில், பாரம்பரிய கட்டிடக் கலை படிப்பில் பி.டெக் பட்டம், கவின் கலை பட்டங்கள் படித்து, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
ஸ்தபதி-க்கு சிற்பகலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
மாமல்லபுரத்தில் உள்ள அரசு சிற்பக்கலை கல்லூரியில், பாரம்பரிய கட்டிடக் கலை படிப்பில் பி.டெக் பட்டம், கவின் கலை பட்டங்கள் படித்து, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இக்கல்லூரியில் படித்தவர்களை, இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 38 ஆயிரத்து 600 கோவில்களில், ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்கும்படி உத்தரவிடக் கோரி, இக்கல்லூரியில் பட்டம் பெற்ற முருகன்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை  விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஸ்தபதி, பொறியாளர் பதவிக்கு  சிற்பகலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்