பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்
x
கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்த அவர்கள் தப்பாட்டத்திற்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். 

இதேபோல் அரசு கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பழங்கால கருவிகள், நாணயங்கள், விவசாய விதைகள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.

பொங்கல் விழா - கல்லூரி மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூரில்  உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  சமத்துவ பொங்கல் வைத்த மாணவிகள் முன்னதாக முளைப்பாரியை சுமந்து  சென்று கும்மியடித்து மகிழ்ந்தனர்.  உறியடி உள்ளிட்ட போட்டிகளிலும் மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கிராமிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

அரசு சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா




திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செவிலியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் கேக் உண்பது உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியில் பொங்கல் பண்டிகையை மாணவ-மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். அவர்கள் வண்ண கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்தும், பல்லாங்குழி, பம்பரம்,  உறியடி என  விளையாடியும், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் மற்றும் நடனமாடியும்  மகிழ்ந்தனர். பெற்றோர்களின் கால்களில் விழுந்து குழந்தைகள் ஆசி பெற்றனர்.

பள்ளி, கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள  அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பொங்கலிட்டு வழிபட்டனர்.  
ஆட்டம், பாட்டம் என களை கட்டிய பொங்கல் கொண்டாட்டம் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்துடன் நினைவு பெற்றது. 



Next Story

மேலும் செய்திகள்