போகி பண்டிகை - உற்சாக கொண்டாட்டம் : பழைய பொருள்களை தீ வைத்து எரித்த பொதுமக்கள்

போகி பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி பண்டிகை - உற்சாக கொண்டாட்டம் : பழைய பொருள்களை தீ வைத்து எரித்த பொதுமக்கள்
x
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, மாமல்லபுரம்,அச்சரபாக்கம்  உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே  எழுந்த பொதுமக்கள், வீட்டு வாசலில் முன் பழைய பொருட்களை போட்டு கொளுத்தி தீ மூட்டி போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.   பழைய பொருட்களை தீ மூட்டியதால் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சிறுவர்கள் தெருக்கள் தோறும் கூட்டம், கூட்டமாக திரண்டு ஆங்காங்கு போகி கொளுத்தி மேளமடித்து உற்சாகத்துடன் காணப்பட்டனர்.  மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போட்டு எரிக்க வேண்டாம் என தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பொதுமக்கள் இவற்றை எரிப்பதை முற்றிலும் தவிர்த்தனர். 


Next Story

மேலும் செய்திகள்