"கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
x
கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தொல்லியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில், 5 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிலரங்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பயிலரங்கில் கலந்துகொண்ட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி அவ்விடத்திலேயே ஒரு கல்லூரியை அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்