கலாமின் கனவை நனவாக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு காலண்டர்

நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 660 மில்லி தங்கத்தை கொண்டு காலண்டர் ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.
x
சிதம்பரம் நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் தங்கத்தின் மூலம் அரிய வகை பொருட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தங்கத்தை கொண்டு தாஜ்மஹால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற்கூரை, மின்விசிறி, வேளாங்கண்ணி கோயில், தொட்டில் குழந்தை திட்ட விழிப்புணர்வுக்கு தங்க தொட்டில் உள்ளிட்டவற்றை சிறிய அளவில் செதுக்கி அசத்தினார். இந்த சூழலில் நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் 660 மில்லி தங்கத்தை கொண்டு அசத்தலான காலண்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் கனவை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலண்டர் 3 மணி நேரத்தில் வடிவமைத்துள்ளதாகவும், இதன் மூலம் தங்க நகைகள் செய்யும் தொழில் மக்களை சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்