2ஆம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77 புள்ளி 73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
2ஆம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 ஆம் கட்டமாக நடைபெற்ற  ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 77 புள்ளி 73 சதவீத  வாக்கு பதிவாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குச் சாவடிகளில் 72 புள்ளி 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் 2ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 



Next Story

மேலும் செய்திகள்